பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



படலத் துறுலக் கணலக் யதமிழ்த்

திரயமத் திலகப் பொருள்வருத் தியினைப் பழுதற்று உணர்வித்து அருளிவித் தகசற் குருநாதா

பவளக் கொடிசுற் றியபொற் கமுகின்

தலையிற் குலைமுத் துதிர்செய்க் கழனிப் பழநிப் பதிவெற் பினினற் குமரப் பெருமாளே!

திரிகடையையுடைய சிவபெருமான் தந்த சாபத்தால் சிறந்த குலத்தில் ஒரு செட்டியின் வீட்டில் தோன்றியருளிய ஞானத்திற் சிறந்த உருத்திரசன்மர் என்னும் பெயரைச் சொன்னால் பிரியத்தோடும் சனகருக்கும் அகத்தியருக்கும் புலத்தியருக்கும். சனத்குமரர்க்கும் அருளைச் செய்தவரும் சங்கப்பலகையை சங்கப் புலவர் நாற்பத்தொன்பது பேருக்கும். வித்தியாசம் இல்லாத ஞானபடலத்திலே பொருந்திய, இலக்கண இலக்கியம் மிகுந்த, இயல் இசை நாடகம் என்னும் மூவகைப் பாகுபாட்டை உடைய தமிழில் இறையனார் தந்த அகப் பொருளின் விருத்தி உரையை, குற்றம் இல்லாதபடி புலப்படுத்தியருளும், ஞானத்தை உடைய உண்மைக் குருநாதனே. பவளக் கொடியால் சூழப்பட்ட அழகிய பூகமரத்தின் உச்சியின் குலைகளிலே, பல முத்துக்கள் உதிர்கின்ற, வயல்களோடுங்கூடிய பழநி என்னும் திருப்பதியிலுள்ள பழநி மலையின் மேலே வீற்றிருக்கும் நல்ல குமரக்கடவுளாகிய பெருமானே! கடலைச் சிறையில் இட்டு, பூக்கள் நிறைந்த காவினிடத்து, தேன் வண்டுகளை உடலில் முத்திரையிட்டு. மடுவிலேயுள்ள கமலமலரை மலரும்படியாகச் செய்து ஆலகாலவிடத்தைப் பிரம கபாலத்தில் ஐயம் ஏற்றுத் திரியும் சிவபெருமானின் உணவாகும்படி நினைத்து, கயல் மீனை பிறழும்படி செய்து, குளத்தில் புகுமாறு செய்து, கலைமானை விரைந்து ஓடும்படி செய்து, பாணத்தைக் கடைபடும்படி செய்து, மாம்பிஞ்சை உப்பிலே ஊறும்படி செய்து, போர் செய்யும் சத்தி வேலை நெருப்பில் புகும்படியாகச் செய்து யமனாகிய பிரபுவை