பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

195



மெத்தத்துக் கத்தைத் தித்தியின்

இனிச்சித்தத் திற்பத் தத்தொடு மெச்சிச் சொர்க்கத்திற் சிற்பரம் அருள்வாயே வித்தைக்குக் காத்திரு தற்பரம் முக்கண்சித் தர்க்குப் புத்திர விச்சித்ரச் செச்சைக் கத்திகை புனைவோனே! நித்யக்கற் பத்திற் சித்தர்கள்

எட்டுத்திக் குக்குட் பட்டவர் நிட்டைக்கற் புற்றப் பத்தர்கள் அமரோரும் நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு முற்றத்துற்று அர்ச்சிக் கப்பழ நிக்குப்பட் டத்துக் குற்றுறை பெருமாளே! சகலவித கலைஞானங்கட்கும் முதல்வனும், தனக்குத் தான்ே தலைவனாகி வேறொரு தலைவனில்லாத முக்கண்களை உடைய சித்தராகிய சிவபெருமானுக்குப் புத்திரனே! மிக அழகிய வெட்சிமலர் மாலையை அணிந்து கொள்பவனே நித்திய கற்பத்திலுள்ள சித்து ஆண்டகைகளும், எட்டுத் திக்கிலும் வசிப்பவர்களும் ஆகிய, தவ நிட்டானுபூதியைப் பெற்றுள்ள பக்தர்களும், தேவர்களும் நீள பூக்களைக்கொண்டு கோயில் முற்றத்துச் சென்று பூசைசெய்ய பழநி மலைக்குள் பட்டத்துக்குப் பொருந்தி வசிக்கின்ற பெருமானே! முத்துக் குச்சாகிய ஆபரணத்தை அணிந்தும், குப்பி முடித்தும், மாலையை பின்னாலே சூழும்படி அணிந்தும், முற்பக்கத்திலே அழகு பொருந்தும்படி நெற்றியின்மேலே, முக்கியமாகிய மரகத திலகம் அணிந்தும், அலங்காரமான இரத்னம் பதித்த சுட்டி என்னும் ஆபரணமும் அழகோடு விளங்க, ஒழுங்கோடுங்கூடிய சித்ர வேலைகள் செய்துள்ள உடையில் அழகும் விளக்கமும் தோன்ற, மதுரமாக இருக்கும்படி, சொல்லுகின்ற சொற்களையும், பவளம்