பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



ته

முன்னாளில் தன் கொம்பால் எழுதிய, முதன்மையான கடவுளே! திரிபுரங்களை எரித்து அருளிய, அந்தப் பெருமையையுடைய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் தேரினுடைய அச்சை முரிந்து துகளாகும்படி செய்த மிகவுந் துணிவுடையவரே! வள்ளியம்மையாரை மணந்தருள வந்தபோழ்து எவ்வாறு வலிந்து வந்து அவளே அணையச் செய்வது என்னும் அம் மனத் துன்பத்துடன் சுப்பிரமணியப் பெருமான் சென்றிருந்த, வள்ளியம்மையார் இருந்த அந்தத் தினைப்புனத்தின்கண், பெரிய யானையாகி, அந்தக் குறக்கன்னியாகிய வள்ளி அம்மையோடு, அந்தத் தன் தம்பியாகிய முருகவேளை, அந்த நேரத்திலேயே, மணந்து கொள்ளுமாறு திரு அருளைச் செய்த பெருமானே! எனத் துதி செய்து உன்மத்த மலரையும் பிறை நிலாவினையும், சடைமகுடத்தில் சூடிக் கொள்ளுகின்ற சிவபெருமான் திருக்குமாரராகிய, மற்போர் செய்கின்ற, திரண்ட தோள்களையுடைய மதங்கள் ஒழுகும் யானை முகத்தை உடையவனை, மத்தளம் போன்றுள்ள திருவயிற்றை உடையவனை, உமா தேவியாரின் திருப்புதல்வனை, தேன் விரியும் பூக்களைக்கொண்டு வணங்குவேன்.

'கைத்தலம் என்பது கையாகிய இடம் என விரிந்து இரு பெயரொட்டுப் பண்புத்தொகை ஆயிற்று. நிறைகனி - இது கை நிரம்பிய பல்வகைக் கனி எனவும். 'கை நிரம்பும் அளவினதாய பருத்த கனிகள் எனவும் பொருள் தந்தது. கப்புதல் - வாய் நிரம்ப வைத்துக் குதட்டி உண்ணுதல், கரத்தோடுங் கூடியது கரி ஏனைய மிருகங்களுக்கு இல்லாததாகிய தும்பிக்கை யானைக் குண்மையின் கரி எனப் பேர் போர்ந்தது. இன்னும் "கைம்மா, கைம்மலை' என யானைக்குப் பேரமைந்துள்ளவாறுங் கருதற்பாலது. கருத்த நிறத்தை உடையது. ஆதலின் கரி எனப் பெயராயிற்று' எனின் அது பொருந்தாது.