பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் • 2{};

பேருலகுக்கு அணியும் படியான ஆடையென்று சொல்லுமாறு, வளர்கின்ற, எட்டுத் திக்குகளிலும் உள்ள அந்தக் கடல் ஏழையும் தண்ணீர் வற்றுமாறு குடித்த அகத்திய முனிவரும் எட்டுக் கண்களை உடைய துய்யதான் நூறு இதழ்களை உடைய தாமரை மலரிலே வசிக்கும், தான்ே தோன்றிய வேதங்கள் நான்கிற்கும் தலைவனாகிய நான்முகனும் கண்களிலே நெருப்பைச் சிந்தி. கடினத்துடனே நெருப்பு உண்டாகும்படி மிகவுஞ் சிறிய புன்னகை புரிந்து திரிபுரத்தையும் நீறாக்கி அழித்த, அதிசயிக்கும்படியான தொழிலை உடைய தலைவரும். பிரணவப் பொருளாக இருக்கும் மேலான சிவபெருமானும் ஆகிய இந்த ஒப்பற்ற மூவர்களுடைய மனங்களும் நிறைந்த தெளிவை அடையும்படி அழகிய காதில். பிரணவத்தினுடைய உண்மையை அன்பு பொருந்த திருவாய்மொழியால் உரைத்தருளும் குழந்தை வடிவத்தோடு கூடிய பரமாசாரியனே எதிர்த்து வந்த அசுரர்கள் தம்முடைய படைகளைக் கொண்டு. சண்டைக்கு வழி செய்ய, அவர் கூட்டமெல்லாம் அழியவும். கொடுமையோடு கோபம் அதிகரிக்கவும் மலைகள் எல்லாம் துகளாகிச் சிந்தவும், பரந்த அண்டத்தின் சுவர் பிளவுகொண்டு அதிர்ச்சியை அடையவும், மலை முடிகள் தகர்ந்து வானுக்கு அப்பக்கத்து அந்த மேலான வெளி கிடுகிடு எனும் ஒலியுடையதாகவும் போர் செய்து திருக்கரத்தே தரித்துள்ள, வேலாயுதம், கொழுப்பை உண்ண்வும், செந்நீர் ஏழு கடல்களைக் காட்டிலும் அதிகமாகப் பெருக குதிரையாகிய சிறந்த மயிலை நடாத்தும் வேடிக்கை மிகுந்த குமரக்கடவுளே உலகத்தில் மேன்மையை உடைய தக்க உயர்ந்த செவ்விய பொன் மலையை, விரைவாகச் சுற்றிவர, சிவபெருமான் அந்தப் பழத்தை விநாயகக் கடவுளிடத்தே கொடுத்த, தன்மையினாலே, சிவபெருமான் நாணமடையுமாறு. அதிகமாகச் சினந்து அந்தப் பழத்தைத் தனக்குத் தரவில்லையே என்று.