பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் & 2? .

அரன் - அடியார் பாவங்களை அழிப்பவன்' என்பது பொருள். மகன் இளமைத் தன்மை உடையவன். -

மத்தள வயிறனை - மத்தளம் போன்ற வயிறு உடையவனை என்பதாம். விநாயகர்க்குத் தலை மிருக உருவமும், வயிறுவரை தேவ ரூபமும், மார்புக்குக் கீழிருந்து பூத உடலும் ஆக மூன்றுருவோடு வந்த பெருமானாதலால் வயிறு பூத உருவப் பங்காதலின் பெரு வயிறாகி, மத்தளம் போன்று இருக்கின்றது என்றார். இஃது உரு உவமை.

'உத்தமி' என்றது உமாதேவியாரை அருள் ஞானம் முதலியவற்றின் வடிவாகி, முப்பத்திரண்டு அறம் வளர்த்து அரனைவிட்டு நீங்காப் பாகத்தளாகி, எல்லா அண்டங் களையும் திரு வயிற்றில் வைத்துக் காத்துப் பெற்று அருளும் இறைவி ஆதலின், 'உத்தமி என்றார். எல்லா உத்தம குணங்களுமாக விளங்குபவள் என்பது குறித்து எனினும் ஆம். -

'மட்டவிழ் மலர்' என்றது புதுப் பூவை நாண்மலரை நாள் மலரில் தான்் மது விரியும் என்பதறிக. முத்தமிழ் நூல் ஒன்றை முன்னர் விநாயகர் மேருமலைமேல் எழுதினார் என்பது,

'முத்தமிழ் அடைவினை முட்டு கிதனின் முர் எழுதி முதன்ாேனே' என்றதனால் அறியக் கிடக்கின்றது. 'முத்தமிழிலும் அடைந்து வினைசெய வலதாகிய பாரதக் கதையை வியாசர் கூற, கொம்பொடித்து மேருமலையின் முன்னாளில் எழுதிய முதல்வனே எனப் பொருள் கூறுவர். இன்னும் பிற கதை கூறுவாரும் உளர். விரிக்கிற் பெருகும்.