பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



'முதல்வோனே என்றது ஈசனும் விநாயகரும் அபேதம் ஆதலின் என்க. இனி முதல்வோனே என்பதற்கு எல்லோரும் எக்காரியஞ் செய்யத் தொடங்கினாலும் முதன் முதல் நினைத்துப் பூசிக்கும் முதன்மையுடையோனே' என்பதும் பொருளாம். சிவபெருமானுக்கு முதற்பேறான புத்திரராதலால் இவரை 'முதல்வோனே' என்றார்.

முப்புறம் - திரிபுரம், இறைவர் குறிப்பின் ஒழுகி விளையாடும் பிள்ளையார் இறைவர் தேரின் அச்சையே முரித்ததனால், 'அதி தீரா என்றார். "எவரும் எக்காரியஞ் செய்யினும் உன்னை முதலில் பூசிப்பாராக. அவ்வாறு பூசியாதிருப்பின் அவர்க்கு விக்கினம் ஆக்குக" எனக் கட்டளையிட்ட தந்தையே தன்னை நினையாது முப்புரத்தார் மேற் போருக்குச் சென்றாராதலின் இறைவன் தேரின் அச்சை முரித்தார். அவர் தன்னை நினைந்த பின்னே அவர்க்குத் துணையாய்