பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

27


கொட்புற்றுஅழ நட்பற்று அவுனரை

வெட்டிப்பலி இட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

முத்தை நிகர்த்த, அழகிய தந்த பத்திகளையுடைய, தேவகுஞ்சரி அம்மையாருக்குக் கணவனே! சத்தி வேலாயுதத்தைத் தாங்கிய, கந்தக் கடவுளே! வீட்டிற்கு ஒப்பு இல்லாத விதையைப் போன்றவனே தந்தைக்கும் குருவாக இருந்தவனே! என்று துதிக்கின்ற, மூன்று திருக்கண்களை உடைய சிவபெருமானுக்கு, மறையின் முதன்மையாய்ச் சொல்லப் பெறுவதாகிய குடிலை மந்திரத்தை உபதேசித்து, மாலும் அயனும் ஆகிய இருவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும், பாதங்களை வணங்கவும், தித்தித்தியெ என்னும் இசைத்தாள ஒலிக்குச் சரியாக, ஒத்து ஒலிக்கும் பாதச் சிலம்புகளை அணிந்திருக்கின்ற, நடனம் செய்யும் அழகிய பாதங்களை, அடியிட்டு, பயிரவி என்னும் ராகத்தை, திசைகளிற் பொருந்த, திருநடனஞ் செய்யவும், கழுகுகளோடு பேய்களுங் கூடி நின்றாடவும், எட்டுத் திசைகளிலுள்ள உலகத்தைக் காக்கின்ற எட்டுப் பயிரவர்களும், அழகிய நடனத்துக்கு, தொக்குத்தொகு தொக்குத்தொகு. தொகுதிரகடக என்னும் இவ் இசை ஓசையைக் கூறவும். கூட்டமாகிய பற்பல பறைகள். அடித்து முழக்கவும், போர்க்களத்தில், குக்குக்குகு குக்குக் குகுகுகு என்னும் ஒலியோடு, முதிர்ந்த கோட்டான். குத்திப் புதை, புகுந்து பிடி என்று குமுறவும், சுழன்று மேலே தாக்கி எழ, நட்புத் தன்மை இல்லாது பகை பாராட்டி வந்த அசுரர்களை வெட்டிக் கொன்று. பலியாக இட்டு, உயர்வுடைய கிரெளஞ்ச வெற்பானது, குத்துப்படும்படி, பொருத்தமாகச் சண்டை செய்யும்படியான வல்லமையைக் கொண்டுள்ள பெருமானே! பத்துச் சிகரங்களும் சிதறி விழ அம்பைச் செலுத்தி, ஒப்பற்ற மந்தரமலையாகும்,