பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

29



夺位

o

த. கோவேந்தன், டி லிட்

என்ற ஆன்றோர் வாக்கும் ஈண்டே கருதத்தக்கது. "ஓம்" அ உ-ம் என்னும் மூன்றெழுத்தால் ஆயது. இவை முறையே தோற்றம், குவிவு. ஒடுக்கங்களை உணர்த்தும். -

கற்பித்தல் - கேட்பார் உணர ஐயம், திரிபு, விபரீதம் என்னும் முக்குற்றமும் அற உணர்த்தல், பேணல் வணங்கல்: இது நச்சினார்க்கினியர் கொண்டது. தொடுதல் கணையை ஏவுதல் விடுத்தல்; இறந்த காலத்தை எதிர்காலத்தாற் கூறினார். இஃது இலக்கண மரபு. ஒற்றை ஒப்பற்ற உயர்வு காட்டிற்று. 'தனி' என்பதும் இப்பொருளதே. கிரி மத்தை கிரியாகிய மத்தை என விரிந்து இருபெயரொட்டாயிற்று. -

'பத்துத்தலை தத்த' என்றது. திருமால் தசரத புத்திரராகி இராவணின் பத்துத் தலைகளுந் தத்தி விழச் செய்த கதையை

பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக என்றது. பாரத யுத்தத்தில் அருச்சுனன் தான்ிட்ட சடதப்படி சயத்திரதனைப் பொழுதுபடுமுன் கொல்லுமாறு பரிதியைச் சக்கரத்தால் மறைத்து சுயோதனன் அணி வகுப்புகள் கலையுமாறு செய்து சக்கரத்தை மீண்டு வாங்கி, "ஈண்டும் பொழுதுளது சொல்லுக" என அருச்சுனனுக்குக் கட்டளையிட்ட கதையைக் குறித்தது.

எமன் இந்திரன் முதலிய தேவர்களை வென்ற இராவணனைக் கொன்றதனையும், பட்டப்பகலை இரவாகச் செய்ததையும், இங்குக் காட்டியது. திருமாலின் பேராற்றலையும், செயற்கரிய செய்பவன் என்பதையுங் குறித்ததற்கு இவனே பின் அருச்சுனனுக்குத் தேர்ச் சாரதியாய் நின்றான் என்றது, காக்குங் கடவுளாகிய மால் அடியார் பொருட்டு எளிய செயலுஞ் செய்பவன் என்றது தோன்ற, -