பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



இலக்க ணங்களும் இயலிசை களுமிக விரிக்கும் அபல மதுரித கவிதனை இயற்று செந்தமிழ் விதுமொடு புயமிசை

புனைவோனே

செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற

நடித்த சங்கரர் வழிவழி அடியவர் திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய குருநாதா

திருக்கு ழந்தையு மெனவவர் வழிபடு

குருக்க ளின்திறம் எனவரு பெரியவ, திருப்ப ரங்கிரி உறைபவ சரவண பெருமாளே.

இருக்குவேத மந்திரங்களின் சொல்லின் பாகுபாடுகளை, அகத்திய முனிவர் அடையுமாறு கூறி அருள் செய்த மேன்மையோனே சரவண மடுவில் உதித்தருளியவனே குகன் என்னும் திருநாமம் பூண்டுள்ளவனே! நன்மைகள் நிறைந்தவனே. இன்பம் விளங்குறும், ஆறு திருமுகங்கள் உடையவனே அழகு மிக்க முருகவேளே என்று இலக்கணங்களும் இயற்றமிழ் இசைத் தமிழ்களும், மிக விரித்துரைக்கும், அழகிய பலவாகிய காதுக்கும் கருத்துக்கும் இன்பமான, பாட்டை, பாடப் பெற்றுள்ள செந்தமிழ் நூல்களை, விதம் விதமாக, அழகிய தோள்களின் மேல் அணிந்து கொண்டிருப்பவனே மேம்பாடுடைய, பொன்னம்பலனிடத்து, ஐந்தொழில் நடைபெற, திருநடனஞ் செய்தருளிய கூத்தர்களின் பரம்பரையாக வந்த அடியவர்கள், அழகிய சிறந்த குருந்தைமரத்தடியில், திருவருளைப் பெறும் பொருட்டு, அருளச் செய்த சிவபெருமானுக்கும், சிறந்த குருவாக விளங்குவோனே! தனது அழகிய குழந்தையும் இவராம் என்று அந்தச் சிவபெருமான் வழிபடுகின்ற, ஆசிரியரின் தன்மை உடையவர் எனவும், வருகின்ற பெரியவனே திருப்பரங்கிரி என்னும் சிறந்த