பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

35



தலத்தில், வாழ்ந்தருள்கின்றவனே குமரக் கடவுளே! அருமையாக விளங்கும் பெண்களின், செந்தாமரையை ஒத்த சிவந்த மெல்லிய பாதங்களை வருடியும் தடவிக் கொடுத்தும் அவர் கூடக் கொண்டுள்ள கருத்தை அறிந்துகொண்ட பிற்பாடு, இடையிற் கட்டியுள்ள சீலையை அவிழ்த்தும், அங்கு இருக்கும். அரசின் இலையை ஒத்து விளங்கும் அல்குலைத் தடவிக் கொடுத்தும், இரு தோள்களோடும் இரு தோள்கள் முலைகள் பொருந்தி, அணைத்துக் கொண்டும், அழகிய கையினால் நகக்குறி வைக்கும் இடங்களிலெல்லாம். நகக்குறி தோன்றவும், இதழைச் சுவைத்து. பல்லாற் செய்யப்படுவனவாகிய அடையாளங்களை இயற்ற, கழுத்தின் அடிப்பக்கத்தில், மயில், குயில், புறா என்று சொல்லப் பெறும்படி வாயினால் அவைகளைப்போல் புள்ளொலிகாட்ட இளகச் செய்யும் நெருப்பில் ഞഖഴ്ച, மெழுகைப் போல் மனம் இளகி, ஆதாரம் மிகுந்த, இன்பநுகர்ச்சியின் பலமானது. அதிகரிக்கும்படி, கையிலுள்ள பழத்திற்கு ஒப்பானது என்று கூறுமாறு, விளங்குகின்ற கொங்கைகளின் மேலே படிய வீழ்ந்து, உருவம் மாறுபாடடைந்து உட்ம்பும் உருக அமிர்தம் சொரிகின்ற, பெரிதாகிய உந்திச் சுழியில், அழுந்தி, மெய் அறிவு கெட இன்பப் பரவசமாகி வருந்தும், மிக்க புணர்ச்சி இன்பத்தினிடத்தில் அறியாமையினால் அதில் விருப்பங்கொண்டு மகிழ்ந்திருப்பது உய்யும் வண்ணம் அதினின்றும் நீங்கவுஞ் செய்வோனே.

அருக்கு மங்கையர் - அருமையான பெண்கள் மங்கை' என்னும் பருவப் பெயர் அதனையுடைய பெண்கள் மேல் நின்றது. கருத்தறிதலாவது அப் பெண்களின் கருத்தும் கனிந்து கூடல் விரும்பி நிற்குங் கருத்து.'அரசிலை அது போன்றுள்ள அவயவத்தைக் குறித்தது. இது ஓர் உவமம், கனி நிகரென இலகிய முலை என்பதற்கு, கூவிளங்கனி, மாதுளங்கனி நிகர்த்த முலை எனினும் ஆம் ஈண்டு கையின் நிகரென இலகிய முலை மேல்