பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



வீழ்ந்து என்பதற்கு ஒழுக்கத்தால் பலாக்கனிச் சுளையில் வீழ்ந்து ஒட்டி உருச்சிதைந்தழியும் ஈயைப்போல' என்பாரும் உண்டு. பெருத்த உந்தி முழுகி என்பதற்குப் பொருந்தப் பெருத்த என்றார். பெருத்த உந்தி - பெரிய உந்திச் சுழி, ஏனெனின், அதன்கண் அகப்பட்டாரைச் சுழித்து இழித்து உள்ளுறவாக்கி அழிக்கும் இயல்புடைமையால், உயர்ந்த இடமாகிய முலை மேல் வீழ்ந்தவன் உருண்டு மருண்டு துன்பப் படலையும், ஆழமாகிய சுழி நீரிற் பட்டவன் தன்னிலை கெட்டு முழுகி அழிந்து ஒழிதலையும் குறிக்கும் நயம் இங்கு காணத்தக்கது. கன கலவி மிகுந்த இன்ப ஆடல், முத்திப்பேறு பெறாதபடி ஒருவனைத் தடுப்பன முன்றாசை. அவை மண், பெண். பொன் என்பன. இவற்றுள் நடுநின்ற பெண் பற்றியே மண்ணினிடத்தும் பொன்னினிடத்தும் ஆசை பிறக்கும். பெண்ணாசை விட்டார்க்கு ஏனை இரண்டாசையும் தான்ே நீங்கும். நீங்க உடனே வீடு கூடும். ஆதலின், கனகலவியை மகிழ்வது தவிர்வேனோ என்றார். இதனை,

காதென்று முக்கென்று கண்ணென்று

காட்டியென் கண்ணெதிரே காதென்று சொண்வி வருமாயை

தன்னை ரவிவிட்ட தாதென்றேன் சணர் கன்ெறு

த7ரி24த் த%Aத்தியை ஏதென் ரெடுத்தரைப் பேண்திரை

உரக# ஏகங்/ரே - என்ற பட்டினத்தடிகள் வாக்கானும் அறியலாம்.

இருக்கு மந்திரம் மந்திர வடிவாகிய இருக்கு வேதத்தை, முனி என்றது ஈண்டு அகத்திய முனியை அடியார்களின் உள்ளக் குகைகளில் வசிப்பவன் ஆதலின் குகன் என்னும்