பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

அருணகிரிநாதர் பட்டினத்தடிகளுக்கு சுமார் 500 ஆண்டுகட்கு முன்பு திருவண்ணாமலையில் பிறந்தார். இளமையில் தாயினை இழந்து தமக்கையால் வளர்க்கப் பெற்றார். இளமையில் செல்வங்களை இழந்து தமக்கையின் கர்ண கடுர வார்த்தைகளால் வெறுப்படைந்தார்.

திருவண்ணாமலை வள்ளாள திருக்கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிர் நீக்க விரும்பிக் குதித்தார். குமரக் கடவுள் துறவி வடிவில் வந்து காப்பாற்றினார். அருணகிரிநாதர் என அழைத்து, நோய் நீக்கி, ஜபமாலை அளித்த பின் மயில் வாகனனாகவும் காட்சி தந்தார். அருணகிரிநாதர் நாவில் தம் வேல் கொண்டு சடாக்ஷரம் பொறித்தார். "எம் மீது பாடுக" எனப்பணித்து "முத்தைத் தரு பத்தித் திருநகை" என அடி எடுத்துக் கொடுத்து திருப்புகழ் பாடக் கட்டளை இட்டார்.

அதன்பின் அருணகிரிநாதரும் குமரக் கடவுள் ஆலயம் தோறும் சென்று பாடினார். இவரது பாடல்கள் திருப்புகழ் எனப் போற்றப்படுகின்றது.

அருணகிரிநாதர் கூடுவிட்டுக் கூடுபாயும் முறையில் கிளி வடிவு எடுத்தார். அப்போது பாடியது கந்தரனுபூதியாகும்.

திருப்புகழ் பல சந்தங்களாக முருகப் பெருமான் மீது பாடப்பெற்ற தோத்திரப் பாடல்கள் ஆகும். முருகப் பெருமானின் திருவருள் பெற்று உய்வதற்குரிய ஏற்புடைய சிறந்த நூல்களுள் தலையாயது இந்நூல்.

1005 பாடல்கள் பல்வேறு திருத்தலங்கள் மீது பாடப் பெற்றன. 314 பாடல்கள் பொதுப் பாடல்கள் ஆகும். ஒரு பாடல்