பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



தேவர்களுக்கு, வஞ்சனையாகக் கொடுமையைச் செய்கின்ற, சூரபதுமன் தம்பியாகிய கிரெளஞ்சன் என்பவனோடு, அசுரர்கள் நடுங்கும்படி எழுந்து, வானமண்டலம் வரையிலும், துரத்திக்கொண்டு சென்ற அந்நாளிலே, தேவேந்திரனின் நாட்டை அழித்தவனாகிய அவ்வசுரனின், வழிவந்த அசுரர்களை, எரித்திட மிகப்பெரிய வலிய வேலாயுதத்தை, செலுத்தியவனே, அமரர்களுடைய படையானது, மகிழ்ச்சிகொண்டு, சத்துருக்களின் சேனா வெள்ளத்தை நடுங்கி அஞ்சுமாறு செய்யும் ஊக்கங் கொள்ளும்படி விண்மண்டலத்துள்ளும் புகுந்தோங்கிச் செல்லுமாறு, முழுக்கஞ் செய்யும், பாஞ்சசன்னியம் என்னும் சங்கத்தைக் கையிலே தரித்திருக்கின்ற பெருமாளுக்கு மருகனே! தினைவிளையுஞ் சாரற் கொல்லையிலே, போய் உலாவுகின்ற வள்ளி அம்மையாரின், காதலர் ஆகவுள்ள, திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் பெருமானே மலைபோன்ற, பெருத்த தனங்களாலும், வளையல்களைப் பூண்டுள்ள, செவ்விய கைகளாலும், செழித்திருக்கும் கயல்மீனை ஒத்த விழிகளாலும், எல்லோரும், வடுவைச் செய்கின்ற கோவைப்பழத்தை நிகர்த்துள்ள உதடுகளாலும் நறுமணங் கமழுகின்ற கொண்டையினாலும், மயங்கச் செய்கின்ற வஞ்சனை எண்ணத்தையுடைய பெண்களின் அவர் வயப்பட்டு அக்கினியிற்பட்ட பஞ்சைப்போன்று மிகவும் கெட்டழிகின்ற அடியனேனும், துன்பத்தோடு கூடிய ஆசைக் கடலிலிருந்தும், முத்திரைக்கரை ஏற. சிறப்பாகக் கூறப்பெறும் சந்த வேறுபாடுகளை, ஒலிக்கின்ற தண்டைகளால் சூழப்பெற்ற, இரண்டு திருப்பாதங்களாகிய, செந்தாமரை மலர்களை, அடியேனுக்குத் தந்தருள்வாயாக.

வரைத்தடங் கொங்கை - மலைபோலும் தோற்றத்தை யுடைய இடமகன்ற முலை வரை இருமடியாகு பெயர் வரை கோட்டிற்கு ஆகி, அதனுடைய மூங்கிலுக்காகி, அது விளையும்