பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

49



மலைக்காயிற்று. வளைப்படுஞ் செங்கை - வளையல் பூண்ட செவ்விய கை, வளை - வளைவை உடையது; வளைத்துச் செய்யப்பட்டது என்பது பொருள். செங்கை அழகிய கை: உருண்டு திரண்டு நீண்டு சிவந்து அழகுறப் பொலிந்து நிற்குங்கை மதர்த்தல் - செவ்வரி பரந்து கடை சிவந்து செழித்திருத்தல். வடுப்படுந் தொண்டை வடுவைச் செய்யும் என்றாம். பல்லால் பற்குறி வைத்து வடுசெய்யப் படுதலின் இனி, 'காளையர் மனத்தை வடுப்படுத்தும் என்றும், இருபிளவாகப் பிளந்து வடுச் செய்யப்பட்ட கொவ்வைக் கனி போன்ற இதழ். எனினும் ஆம். கெண்டை என்றது கெண்டை மீனை ஒத்த வடிவம் பிறழ்ச்சி உடைய கண்ணை தொண்டை என்றது நிறத்தால் கொவ்வைக் கனியை ஒத்த இதழை. இவை இரண்டும் உருவகம். விரைத்திடுங் கொண்டை - நறுமணம் வீசும் கொண்டை கூந்தற்கு நறுமணம் மலர்களாலும் வாசனைத் தைலங்களாலும் அமைந்தது.

ஆடவரை மருட்டுவது கொங்கை, கண், இதழ். குழலாதலின் முறையே கூறினார். சிந்தை மாதர் - ஆழமாகிய சிந்தையை உடைய மாதர், பல்வகைப்பட்ட சிந்தையை உடைய மாதர் என்பனவும் ஆம்.

'எரிப்படும் பஞ்சு என்றது ஒரு பயனும் பெறாது அழிந்தொழிதலைக் குறித்தது - இனற்படுந் தொந்தவாரி - துன்பத்திற்கிடமாகிய பற்றுதலாலுண்டாகிய பிறவிக்கடல் என்பது பொருளாம். பிறவிக் கடலிற்பட்டு ஆசாபாசத்தால் இன்னல் அடையாதிருக்க இறைவன் திருவடிக் கமலமாகிய கலனைத் துணைக் கொண்டால் பிறவிக் கடல் கடந்து முத்திரைக்கரை ஏறுவர். இதனாலன்றோ.