பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



அரியதன்ப டைக்கர்த்தர் என்று

அசுரர் தம்கி ளைக்கட்டை வென்ற அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச்சி னந்து

உலகமும்ப டைத்துப் பரிந்துள் அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

கதிரவனும் இந்திரனும், வெற்றியோடு கூடிய ரங்குகளுக்கு, அரசர்களாகிய சுக்கிரீவன் வாலியென்றும், வமையில்லாத விண்டுவின் உந்தியினின்றும் பிறந்த தேவன், ரடியின் கூட்டங்களுக்குத் தலைவன் ஆகிய சாம்பவன் என்றும் அக்னிக் கடவுள், புகழ்மிகுந்த நீலன் என்னும் சேனைத் தலைவன் என்றும் உருத்திரக் கடவுள், மேன்மை வாய்ந்த அனுமான் என்றும், இணை கூறுதற்கரிய தேவர்கள் எல்லோரும், இந்த வானரக் கூட்டத்திலே தோன்றி, புவியில் அடைய, அவர்களைத் தனது மிகச் சிறந்த சேனைகளுக்கு, படைத் தலைவர்களாகக் கொண்டு, அரக்கர்களுடைய, சுற்றத்தார்களின் கூட்டத்தைக் கொண்டு அழித்துவென்ற நெடுமாலின், புகழ்ந்து கொண்டாடப் பெறும், சிறப்பினைக் கொண்டுள்ள மருகனே! பிரமனையும், தலையில் குட்டி, சீற்றமுற்று உலகத்தையும் உண்டாக்கி, அதனை ஆதரவோடு காத்து, அருள் மிகுந்த திருப்பரங்கிரி என்னும் திருத்தலத்தில், சிறப்போடு எழுந்தருளி இருக்கும், பெருமானே தாயாரின் கருப்பத்திற் பொருந்தி, பத்துமாதம் அளவும், தாயாரின் வயிற்றில் தங்கி யிருந்து, அங்கேயே முதிர்ந்து வளர்ந்து, பத்து மாதமும் முடிந்தபின் கடைசியாகத் தாயார் வயிற்றினின்றும் வெளிப்பட்டுப் பிறந்து, குழந்தை உருவத்தைப் பெற்று, அந்தக் குழந்தை உருவத்தைக் கழுவி அங்கேயே கையில் தாங்கி, பாலானது சுரந்து கொண்டிருக்கும் முலைகளை, ஊட்டுவிக்க, நிலத்திலே படுத்துக்

s