பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



பன் றியங் கொம்புகம

டம்புயம் கஞ்சுரர்கள் .

பண்டைஎன் பங்கமணி - பவர்சேயே!

பஞ்சரங் கொஞ்சுகிளி

வந்துவந்து ஐந்துகர

பண்டிதன் தம்பியெனும் வயலூரா!

சென்ற முன் குன்றவர்கள்

தந்தபெண் கொண்டுவளர்

செண்பகம் டைம்பொன்மலர் செறிசோலை

திங்களுஞ் செங்கதிரும்

அங்குலுந் தந்குமுயர்

தென்பரங் குன்றில் உறை பெருமாளே.

பன்றியினது அழகிய பல்லையும் ஆமை ஒட்டையும், பாம்பினையும் தேவர்களின் பழமைப் பட்டதாகிய எலும்புகளையும், தன்னுடைய திருமேனியில் அணிந்து கொள்பவராகிய சிவபெருமானுக்கும், திருமகனே கூட்டில் கொஞ்சிப் பேசுகின்ற கிள்ளைகள், பல்காலும் வந்து, ஐந்து கைகளையுடைய விநாயகக் கடவுளின், தம்பி என்னும் முறையால் அழைக்கப்பெறும், வயலூர் என்னும் அழகிய திருத்தலத்தை உடையவனே தினைவிளையும் புனத்திற்குப் போய், முற்பட்ட குறிஞ்சி நிலத்தவராகிய குறவர்கள். தவத்தாற் பெற்றுக் கொடுத்த வள்ளி அம்மையாராகிய பெண்ணை, மனைவியாகும்படி திருமணம் செய்துகொண்ட, உயர்ந்து வளர்கின்ற, சண்பக மரங்களில் பசுமையாகிய பொன்போல் மலர்கள் மலரும்படியான, சண்பக மலர்கள் அடர்ந்த சோலையோடு விளங்குவதும், நிலவும் ஞாயிறும் முகிலும் தங்குகின்ற, உயர்ந்த தென்பாண்டி நாட்டிலுள்ள திருப்பரங்குன்றத்