பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



என்பதை ஆன்மாக்கள் அறிந்து உய்தற் பொருட்டு அணிந்து கொண்டார் என்பதுவும் கதை.

கரர்கள் பண்டை என்பு என்றது பிரமம் திருமால்களின் எலும்புகளை, இவ் எலும்புகளை அரன் அணிவதும் தன் ஈறில்லாமையை ஆன்மாக்கள் அறிந்து தன்னை வந்து அடைய வேண்டும் என்னுங் கருணையினாலேயாம். இதனை,

'கண்டவிட்ச்த்தியத்தைக் காட்டவுங்கங் காணமுதன் அண்டவிட்ச் வைத்தனையே அங்குச்செ குற்றமென்ன" என்ற வாட்போக்கிக் கலம்பகத்தாலும் அறியலாம்.

விநாயகர், ஒளவை முதலியவர்களின் செந்தமிழ்ப் ாக்களைக் கேட்டு அருள் செய்பவர் ஆதலினாலும், ஒவ்வொருவர் நூலிலும் முதலிற் பாடப் பெறும் பாடல் சான்றவர் ஆதலினாலும் ஐந்துகர பண்டிதன் என விநாயகரைக் கூறினமை காண்க.

உந்தித்தடத்து வீழ்ந்து முழுகி அழிவேற்கு நின் திருவடிகளாகிய புணை தந்து முத்திக்கரை சேர்ந்தருள் என்றதாம்.

★★★