பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



நமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி

அணிக சானன விம்பனோர் அம்புலி மவுலி யான் உறு சிந்தைஉ கந்தருள் இளையோனே!

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே!

கெடாததாகிய கன்னிப் பருவத்தை உடையவளும் கருப்புநிற முடைமையாற் காளி என்னுந் திருநாமத்தை உடையவளும், பாவிகளுக்கு அச்சத்தைத் தருகின்றவளும், அனைத்துயிர் கோடிகளுக்கும் இன்பத்தைச் செய்தருள்பவளும், பச்சை நிறத்தாற் கவுரி என்னுந் திருநாமம் பூண்டிருப்பவளும், நீல நிறத்தோடு விளங்கி துர்க்கை எனப் பெயர் பூண்டிருப்பவளும், தனக்கு மேல் உயர்வின்றித் தான்ேதாய் உயர்ந்திருப்பவளும், எல்லா உலகங்களுக்கும் தாயாய் விளங்குபவளும், மூல மந்திரமாகிய குண்டலி ஆற்றலாய் விளங்குபவளும். மாயாரூபியும், சண்டன் என்பவனை வதைத்தவளும், கடைப்பட்ட எம்மனோர்க்கும் அன்னையாய் இருப்பவளும், எந்தவிதமான குறைவும் இல்லாது நிறைவாக நிற்பவளும். உமாதேவி என்னும் திருநாமம் பூண்டுள்ளவளும், மந்திர வடிவமாக விளங்குபவளும், விண்ணில் வசிப்பவளும், பற்பல வகைப்பட்டதாகிய ஆகமங்களிலேயும், புகழ்ந்து கூறப்பெறும் அழகை உடையவளுமாகிய மலைமகள் தேவி, பெற்றருளிய அழகிய புத்திரனே பெருச்சாளியை வாகனமாக ஏறிச் செலுத்திய ஐந்து கைகளைக் கொண்டுள்ள கணாதிபதியும், நம்முடைய விநாயகக் கடவுளும், அழகிய களிற்றின் முகத்தை உடையவரும் ஆன கணேசப் பெருமானுக்கும், விடத்தைக் கக்குகின்ற பாம்பை அணிந்தருள்பவனுமாகிய, பிறை சூடியுள்ள விரிசடை பாரத்தையுடைய சிவபெருமானும், மேலான