பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



தம்முடைய உள்ளத்தில் விரும்பியருளிய, முருகக் கடவுளே! வளரும் இயல்புடையதாகிய வாழை மரமும், மஞ்சட் செடியும் இஞ்சிச் செடியும் சிறிதும் வெற்றிடம் விடாது நெருங்கி விளைந்துள்ள, அழகிய விளக்கம் பெற்ற, பெருமையையுடைய, திருவருள் பெற்ற சிறந்த நகரமாகிய திருச்செந்தூரில் வந்து வீற்றிருந்தருளும், முருகப் பெருமானே செந்தாமரை மலரில் வசிக்கும் திருமகளோடு, இந்திராணியும், ஒப்புச் சொல்ல முடியாத பெண்களது சந்தனத்தையும் கலவைச் சாந்தையும் பூசியுள்ள குளிர்ச்சியாகிய முலைகளினாலே, அழகிய கைகளினாலே இரண்டு நீலோற்பலங்களை ஒத்த காமக் களவைப் பற்றிச் சொல்லும் நூலைத் தெரிந்த, கபடம் பொலியும், மைதீட்டிய கண்களினாலே, காம மயக்கத்தைத் தரும்படியான நறுமணம் வீசி இன்பந்தருவதாகிய, கருமை நிறம் பொருந்திய குழலினாலே நிலவுக்கு நிகரான முகத்தினாலே மயங்காதபடி தூய்மையான மனத்தைப்பெற்று. விரிந்த, அழிவு இல்லாத, அறத்தையும் பொருளையும் இன்பத்தையும் பெறுதற்கு படித்துக் கற்றுத் தேர்ந்து அறிந்து, கற்பன முற்றுப் பெற்றமையால் இனிக் கற்பன இன்றிக் கற்றலினின்றும், நீங்கிய பிற்பாடு திருவருளை, அறியும்படியான ஞான வழியை அடியேன் அடையும்படி அன்பினாலே இன்புறச் செய்யும் ஒசையைக் கொண்டுள்ள, சிலம்பு புலம்பிடும். சிலம்பணிகள் ஒலிக்கும்படியாகிய, செம்பொன்னாலாகிய, கிண்கிணி பொருந்தியுள்ள முருகக் கடவுளே தேவரீரது திருவடி மலர்களை அருள் செய்வீராக!

மோகினி - மாயா ரூபியும் இறைவனையும் மயக்குபவள் ஆதலின் மோகினி என்றார். சண்டினி சண்டன் என்பவனை வதைத்தவள் என்பது பொருள். மந்திரி - இனிய மந்த சாந்த குரலை உடையவள் எனப் பொருள் உரைத்தலும் ஆம் ஆகம சுந்தரி - ஆகம வடிவையும், சுந்தர வடிவையும் உடையவள்