பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©

  • கோவேந்தன், டி லிட் & 65

திருமகனே இடையில் அணியும் மாலையும், ஒலி செய்கின்ற கிண்கிணி மணியும், சிலம்புரம், நெருங்கியுள்ள தண்டைகளும், அழகிய மணிகளால் ஆகிய சதங்கையும், மிழற்றும்படி, மயிலின் மேல், உள்ளக் களிப்போடு, எப்பொழுதும் வருகின்ற குமரக் கடவுளே! திரு ஆலயத்தின் முன் வாயிலிலே, அலைகள் ம்ோதுகின்ற திருசெந்தூர் என்னும் அழகிய பதியில் வீற்றிருந் தருள்கின்ற பெருமானே! காதணிகளாகிய இரண்டு குண்டலங்கயுைம், தாக்கி மோதும் கெண்டை மீன் போலும் கண்கள். ஒப்பற்ற குமிழமலரை ஒத்த நாசியை நெருங்கி வரவும் இரண்டு வில்லையொத்த புருவங்களும் நெரிப்புக் கொண்டு உயர்ந்து தோன்றவும், பஞ்சணையின் மேலே கருத்த இருளை ஒத்த கூந்தலின் வரிசை, வஞ்சிக் கொடியைப்போன்ற அரையிலே, தரித்திருக்கும் பெரிய ஆடையுடனே அவிழ்ந்து கோரவும் அதரபானத்தை பருகிச் சுவைக்கின்ற நாக்கினால் நெஞ்சு அவசமாகவும், வாசனையோடு சேர்த்த சந்தனக் குழம்பும் சேறாகவுள்ள குங்குமம் பரிமளிக்கின்ற முலைகளின் உச்சியைப்பற்றி, எழும்போதெல்லாம், நறுமணத்தை நுகருமாறு, உவாமதியை ஒத்த அழகிய முகத்திலே நல்ல மணமிகு சிந்துரத் திலகத்தை விரும்பி அணிந்துள்ள மாதர்களுடன் கூடி வாழும் மூடனாகிய அடியேனுக்கு அறிவு நன்மை உண்டாகும்படி திரு. அருளைச் செய்வாயாக.

குழை - காதணி, காதளவு நீண்டு பரந்த கண்ணார் ஆதலின் இருகுழை யெறிந்த கெண்டைகள் என்றார்.

இதனை,

கெண்டைவிதி”

என்றார் பிறரும். நாசி குமிழமலரை ஒத்திருத்தலின், ஒரு குமிழடர்ந்து வந்திட என்றார். - -