பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

67



எனப் பிறருங் கூறியமை காண்க. கங்கையைச் சடையில் அணிந்தது பகீரதன் தவத்திற்கு உவந்து கங்கையின் வீறு அடங்க என்பது கதை. -

இதழி ஓங்காரவடிவமாக இருத்தலினால், தாம் பிரணவப் பொருள் என்பதை ஆன்மாக்கள் அறிந்து தம்மை வழிபட்டு உய்ய வேண்டும் என்னும் கருணை பற்றியே இதழி - கொன்றை. சிவ பெருமான் உயிர்களுக்கு இன்பம் அருளுவோன் ஆதலின் 'சங்கரன் என்னும் திருநாமம் உண்டாயிற்று. இதனை,

இன் குர் செய்தவிர் சங்கரன்'

என்றதான்ும் அறியலாம் -

இமவரை பனி மலை பார்வதி பனிமலை பயந்த பாவை யாதலின், இமவரை தருங் கருங்குயில் என்றார்.

குரல் இனிமையாலும் நிறத்தாலும் குயில் அம்பிகைக்கு உவமம் ஆயிற்று. தேவியார் பசுமை நிறமுடைமையானும் அழகுடைமையானும், உயிர்கட்கு இன்பம் பயக்கும் இதந்தரு சொற்களை மிழற்றி உயிர்களை உய்வித்தலானும், மரகத நிறந்தருங் கிளி என்றார். நாதப் பிரமமாக விளங்கும் இறைவரும் இன்புற இசைக்கும் மிழற்றும் பெற்றியன் ஆதலின் உமாதேவியரைக் குயில்" என்றும், கிள்ளை என்றுங் கூறினர். எனினும் பொருந்தும் எல்லா உயிர்களுக்கும் உயிராக இருந்து இயக்குபவள் ஆதலின், எனது உயிர் என்றார்.

இறைவனைப் போலவே இறைவிக்கும் முக்கண் உடைமையால், திரியம்பிகை என்றார். அம்பகம் - கண். பெருவாழ்வு என்றது பெருஞ் செல்வத்தை, செல்வம் இன்றேல் வாழ்வு இல்லை யாதலின்,