பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஒம்

திருமுருகன் துணை

சிறப்புப் பாயிரம்

நூற் சிறப்பு


   தந்திமுக னைக்குருவைத் தம்பிரானைத் தொழுவோம்,
   சிந்தைதனில் அஞ்செழுத்தைச் செப்புவோம்,
                       கந்தனின்
   பேரைக்கொண் டாடிப்ர தாபிப்போம், பின்னை
                       நமக்கு
   ஆரைக் கொண்டு என்கா ரியம்.


   வேதம்வேண் டாம்சகல வித்தைவேண் டாம்கீத
   நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், ஆதி
   குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள்போற்று
   திருப்புகழைக் கேளிர் தினம்.

நூற் பயன்


   ஞானம் பெறலாம், நலம் பெறலாம், எந்நாளும்
   வர்னம் அரசாள் வரம்பெறலாம், மோனவீ
   ஏறலாம் யானைக்கு இளையர்ன் திருப்புகழைக்,
   கூறினார்க்கு ஆமேஇக் கூறு.


   ஆறுமுகம் தோன்றும், அழகியவேல் தோன்றும்அவன்
   ஏறுமயில் தோன்றும் எழில் தோன்றும் சீறிவரு
   சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப்
   பாரில் வழுத்தினோர் பால்.