பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



ஆகாயத்தின் கண், உயரப் பறக்கின்ற பறவைகள் மண்ணிலே வர, விரலைச் சேர்க்கின்ற ஏழு துளைகள் செய்துள்ள புல்லாங்குழலை. விரலால் முறையாகத் தடவப்பெற்ற, பல் வகையாகிய பண்கள், இசைத்து ஒலிக்கின்ற கருத்த மேகம் போலும் திருமேனியை உடையவனும், வேதங்களால் துதிக்கப் பெறுபவனும் உலகமுகடு அளாவ நீண்டவனும் ஆகிய திருமால், மன மகிழ்ச்சி அடைதற்கு உரிய மருமகனே! எல்லார்க்கும் அருள் செய்து துணையாய் இருப்பவனே! நற்குணங்களை உடையவனே சரவணப் பொய்கையில் உதித்தவனே யாவரும் வணங்கத் தகுந்த முருகக் கடவுளே! மேன்மை பொருந்திய குருவாக இருப்பவனே, ஊழி ஊழிதோறும் அழகொடு வளர்கின்ற ஆறு திருமுகங்களை உடையவனே குகன் என்னுந் திருநாமம் பூண்டவனே துறையிலே திரை வீசி எறியப் பெற்ற, அழகிய திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளும் பெருமானே களப கத்துரிச் சாந்து பூசி வழியும் பூரித்த பாரித்த முலைகளை உடையவரும், நஞ்சும் அமிழ்தமும் கலந்த கண்களை உடையவரும், நீர் தயிலம் முதலிய இட்டுக் கழுவி நல்ல மயிர்ச் சாந்து முதலிய தடவி அவை வழி தரு கூந்தலையுடையவரும், எப்படிப்பட்டவர்களோடும் காமக் கலக்கத்தைச் செய்யும், கயல் மீனை ஒத்த கண்களால் எறியப்படும் குழை என்னும் காதணிகளையுடைய தந்திரக்காரரும், கைப்பொருள் இல்லாத வாலிபர்களை, தந்திர வழியைக் கொண்டு நடந்தும், பலவிதமாகிய சொற்களைக் கொண்டு பேசியும் தம்மை விட்டுப் பிரிந்து போகும்படி விடுகின்றவரும், தெருவழிகளிலேயே எப்படிப்பட்டவர் களிடத்தும் புன்னகை செய்து, அதனால் அவர்கள் மனம் பிளவுபட்டால், அளவு ஒழுகியர், அதைக் கொண்டு அவர்கள். ஆசைக்கும் அவர்கள் தரும் பொருளுக்கும் தக்கதாக நடந்து கொள்பவரும், நடையினாலும் உடையின்ாலும், அழகுடனே