பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது   பொருப்பது பொடிப்பட விடுத்திடு கைவேலா
   இருப்பிடம் உனக்கெது எனக்குஅருள் இயம்பாய்
   உருக்கநல் விழுக்கலம் ஒழுக்கம்இல ரேனும்
   திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்போம்.


   திருப்புகழ் படிக்கும்அவர் சிந்தைவலு வாலே
   ஒருத்தரை மதிப்பதில்லை உன்றன் அருளாலே
   பொருப்பாரை மிகப்பொருது வென்றுமயில் மீதே
   தரித்துஒரு திருத்தணியில் நின்றபெரு மாளே,


   ஓராறு மாமுகனும் உச்சிதமெய்ஞ் ஞானகுகன்
   பேரால் அருணகிரி பேருலகில் - சீராரும்
   தோத்திரம தாகத் துதிக்குந் திருப்புகழை
   ஏத்தின் அவர் ஈடேறுவார்.


   அருணகிரி நாதர் பதினாறு ஆயிரமென்று
   உரைசெய் திருப்புகழை ஒதீர் - பரகதிக்கஃது
   ஏணி அருட்கடலுக்கு ஏற்ற மனத்தளர்ச்சிக்கு
   காணிப் பிறவிக் கரம்.


   திருப்புகழைக் கற்கத், திருப்புகழைக் கேட்கத்,
   திருப்புகழை நித்தஞ் செபிக்கத், திருப்புகழை
   அர்ச்சிக்க முத்தினளிதாகுமே கூற்றைவென்று
   கர்ச்சிக்கல் ஆமே கெடீ

***