பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



13. தந்ததன தான்் தந்ததன தான் தந்ததன தான் - தனதான்

கன்றிவரு நீல குங்கும படீர

கஞ்சமலர் மேவும் முலைகாட்டிக்

கங்குல்செறி கேச நின்றுகுலை யாமை

கண்கள்கடை காட்டி விலைகாட்டி

நன்று பொருள் இது வென்றுவிலை பேசி

நம்பி விடுமாதர் உடனாட்ட நஞ்சுபுரி தேரை அங்கம்.அது வாக -

நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே! குன்றிமணி போலச் செங்கண்வரி நாகம்

கொண்டபடம் வீசு மணிகூர்வாய்

கொண்டமயி லேறிக் குன்றிடிய மோதிச்

சென்றவடி வேலைக் கொடுபோர்செய்

மன்றல்கமழ் பூகம் தெங்குதிரள் சோலை

வண்டுபடு வாவி புடைசூழ

மந்திநட மாடுஞ் செந்தில்நகர் மேவும்

மந்தசுர காலப் . பெருமாளே!

குன்றி மணியினது நிறத்தை நிகர்த்ததாயுள்ள, சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு, தான்் பெற்றிருக்கும் படத்தை ஆட்டும். அழகிய கூர்மையான வாயை, கொண்டுள்ள மஞ்ஞையின் மேல் ஏறிக்கொண்டு வரைகளெல்லாம் தகர்ந்து சரியும்படி தாக்கி, குற்றமகன்ற வடித்தெடுக்கப்பட்ட வேலாயுதத்தை கையிற்கொண்டு போரைச் செய்கின்ற, நறுமணம் வீசுகின்ற, பாக்கு மரங்களும் தென்னை