பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



வினைச்சண் டாளனை வீணனை நீள்நிதி

தனைக்கன் டாணவ மானநிர் மூடனை விடக்கண் பாய்நுகர் பாழனை யோர்மொழி

- பகராதே

விகற்பம் கூறிடும் மோக விசாரனை

அறத்தின் பால்ஒழு காதமு தேவியை விளித்துன் பாதுகை நீதர நானருள் பெருவேனோ! முனைச்சங் கோலிடு நீல மகோநதி

அடைத்தஞ் சாத இராவணன் நீள்பல முடிக்கண் றோர்கணை ஏவும் இராகவன்

மருகோனே!

முளைக்குஞ் சீததி லவொட ராவிரி

திரைக்கங் காநதி தாதகி கூவிளம் முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு முருகோனே!

தினைச்செங் கானக வேடுவ ரானவர்

திகைத்தந் தோவென வேகனி யாகிய திறற்கந் தா: வளி நாயகி காமுறும் எழில்வேலா!

சிறக்குந் தாமரை ஒடையின் மேடையில்

நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய திருச்செந் துர்வரு சேவக னே சுரர் பெருமாளே! கூரிய முகத்தைக் கொண்டுள்ள சங்கங்கள் ஒலிக்கும், நீல நிறங் கொண்ட பெரிய கடலைத் திரு அணைகட்டி யாருக்கும் பயப்படாத இராவணனுடைய அழியாத நீண்ட வர வன்மையை உடைய தலைக்கு அதனைக் கொய்யுமாறு இணையற்ற ஒரு கணையைச் செலுத்திய இராமபிரானுடைய மருமகனே! பிறக்கும் இயல்புடைய குளிர்ந்த நிலவினோடு, படத்தை விரிக்கும்