பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

83



பாம்பையும், பரந்த அலைகளை உடைய கங்கா நதியையும் ஆத்தி மலரையும் வில்வத்தையும், திருமுடியில் அணிந்து கொள்ளும் சிவபெருமானது. மிக்க அருளால் தோன்றியருளிய முருகக் கடவுளே! தினை விளைகின்ற செவ்விய குறிஞ்சி நிலத் தினைப்புனத்தில் வாழும், வேடர்கள் ஆனவர்கள், மருண்டு ஐயோ! என்று வியந்து கூற வேங்கைமரமாக நின்ற கந்தவேளே! வள்ளிநாயகி காமுறும் வள்ளியம்மையார் ஆசை கொள்ளும்படியான அழகைக் கொண்ட வேலாயுதக் கடவுளே! பூக்களினால் விளக்கங் கொண்டிருக்கின்ற தாமரை பூத்துள்ள ஓடைகளிலும், மேடையில் மேட்டுப் பாங்கான நிலங்களிலும் அழகான நிறத்தோடு விளங்குகின்ற கருப்பங் கொண்ட சங்குகள், பால்போலும் வெண்மை நிறத்தையுடைய முத்துக்களை வீசும் திருச்செந்தூர் என்னும் திவ்விய தலத்தில் வந்தருளி வீற்றிருக்கும் வீரனே, தேவர்களுக்கெல்லாம் தலைவனே அனிச்சப் பூவின் மேலும், வில்லால் அடித்ததனால், குற்றமற்ற நுண்ணிய பொடியாகிய பஞ்சின் மேலும், குளிர்ச்சி உடையதான் வாவியை விட்டு நீங்காத, இளமை பொருந்திய அன்னப் பட்சியின் இறகின் மேலும், சிறந்து விளங்குகின்ற சிறிய பாதங்களைக்கொண்டுள்ள இளமை பொருந்திய மங்கையர்களின், சூரியனைப்போல ஒளிக்கின்ற, மரகத மணிகளினால் ஆகிய பசுமையான ஆபரணங்கள் விளங்குகின்ற, கச்சணிந்த முலைகளின் மேல், முகத்தை அழுத்தி அணைகின்ற பாபச் செயலுடையவனும், உயிரானது கடைத்தேறும்படியான நல்வழியைக் கவனியாத, தீவினைகளை உடையவனாகிய சண்டாளனும் பயனற்றவனும், மிக்க பொருளைப் பார்த்து அகங்காரம் கொண்ட அறிவற்ற மூடனும், பிற உயிர்களின் தசையைப் பிரியத்தோடு உண்ணும் பாழானவனும், ஓர் சொல்லும் எதிர் கூறாது.மன மாறுபாட்டைக் கூறும் காம விகாரனும், அறத்தின் நெறியில் செல்லாத மூதேவியும் ஆகிய அடியேனை விளித்து, ஒ முருகக் கடவுளே!