பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

95



சோலையிலுள்ள, செவ்வரிகள் பொருந்திய வண்டுகள், சூழ்கின்ற மலர்கள் உதிர்ந்துள்ள பழநிமலை என்னும் திருக் குன்றில் வீற்றிருந்தருளும் பெருமானே உயர்ந்த வீட்டுக் கதியைத் தடுக்கும், பெண்களின் புதுமையான மணியணிகள் பூண்ட மிகப் பெரிய முலைகளாகிய மலைகளின்மேல் மிகவுங் காதல் மயக்கங்கொண்டுள்ள கவலைப் படுகின்ற மனத்தை உடையவனானாலும், முருகக் கடவுளே! உம்முடைய கீர்த்திவாய்ந்த, சிறந்த மாற்றுயர்ந்த பொன்னை, நிகர்க்கும் அழகிய மேனியும், ஆறு அழகிய முகங்களும் மிகுந்த வல்லமை வாய்ந்த, வயிரமணி போலும் புயங்களையும். கூராகிய முனையைக் கொண்டுள்ள, வெற்றி பொருந்திய வேலாயுதத்தையும், அரவைப் பற்றிக் கொண்டிருக்கின்ற, மயிலையும். ஏழாகிய உலகங்களும் நடுங்கும்படி, கூவுஞ் சேவலையும் தொண்டர்கள் துதித்து, தங்கள் வாழ்வைப் பெறுகின்ற புதிதாகிய தாமரைப் பூவை நிகர்த்த திருத்தாள்களையும், ஒரு காலத்தும் நான் மறக்க மாட்டேன்.

விலைப் பெண்கள் உயர்ந்த பரகதியைக் கெடுத்து நரகத்திலிடர்ப்பட விடுவோர்கள் ஆதல்பற்றி, கதியை விலக்கும் மாதர்கள் என்றார்.

2துருதி ை/ேக்கு 2ொதும்ாணவாரை விட்டேறுகின் தரகதிக் காணகேன்தான்்” . என்றதும் மெய்ப்பிக்கும். மாதர் காதலை உண்டாக்குவோர் என்னுங் காரணம் பற்றி வந்த பெயர். வெற்பு தனத்துக்குவமை ஆதலின் கனதன வெற்பு என்றார்.

பாகு என்னும் வடமொழி வாகு எனத் தமிழில் வந்தது. அயில் - கூர்மை. வெற்றி வென்றதன் மேல் ஆகிய புகழ், வேல் - வெல்வது என்னும் பொருளது. தோகை';