பக்கம்:திருப்புமுனை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


“அவன் ஆசிரியர்கள்'ட்டே குழைஞ்சு குழைஞ்சு அவங்களையெல்லாம் நல்லா காக்கா பிடிச்சு வச்சிருக்கான்'டா!”

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தது போல் இருந்தது. கண்ணாயிரம் கூறிய காரணம் 'சப்'பென்று இருந்தாலும், அதிலும் உண்மை இருப்பதுபோல் மணியும் தங்கதுரையும் கருதி அதை ஆமோதிக்கும் பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் போக்கைக் கண்டு அருளுக்குச் சிரிப்பு வந்தது.

“பசி எடுத்த பறவை பழ மரத்தை நாடிப் போறதிலே என்ன தப்பு? அறிவுப் பசி கொண்ட இனியன் ஆசிரியர்களைத் தேடிப் போறான் இது எப்படித் தவறாகும்? அதுவே ஒரு திறமை தானே!”

அருளின் காட்டமான பதில் அவர்கள் வாயை அடைத்தது; என்ன பேசுவது எனத் தெரியாது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அருள் எப்பவும் இனியனை ஒசத்தியே தான்'டா பேசுவான்”. மெதுவாக முணுமுணுத்தான் மணி.

“என்ன ஆனாலும் சரி. இந்த ஆண்டு பள்ளிப் போட்டி எல்லாத்திலேயும் நாமும் பங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/13&oldid=489708" இலிருந்து மீள்விக்கப்பட்டது