பக்கம்:திருப்புமுனை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


கண்ணாயிரம் பேசியதன் உட்கருத்து மற்றவர்களுக்குத் தெளிவாகப் புலப்படவில்லை.

“அதெப்படிடா முடியும்?” கேள்விக் கனை தொடுத்தான் தங்கதுரை.

“தங்கதுரைக்கு எப்பவும் எதிலேயும் அவநம்பிக்கைதான். முயன்றால் முடியாதது உண்டா? பொறுத்துப் பார், எல்லாம் தெரியும்?”

கண்ணாயிரத்தின் பேச்சு ஏதோ விபரீதத்துக்கு வழி வகுப்பது போல் அருளுக்குத் தோன்றியது. தவறான நோக்கும் போக்கும் உள்ள அவர்களோடு தொடர்ந்து பேசவே அவனுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் செல்ல முனையும் பாதை மிகத் தவறானது எனச் சுட்டிக்காட்டும் வகையில் சரியான பாதையைக் காட்டிப் பேசலானான்:

“உங்க முயற்சியை படிப்பிலேயும் நல்ல செயல்கள்’லேயும் திருப்பினால் உங்களுக்கும் பரிசும் பாராட்டும் தானாக வரும். அடுத்த வனுக்குத் தீங்கு செய்யறதிலே சிந்தனையைச் செலுத்தினா பழியும் தண்டனையும்தான் மிஞ்சும். உங்க வழிக்கு நான் வரலேப்பா, நூலகத்துக்கு நான் போகனும் நேரமாச்சு.” எனக் கூறி நடக்கத் தொடங்கினான் அருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/15&oldid=489711" இலிருந்து மீள்விக்கப்பட்டது