இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
அருளின் அறிவுரையைக் கேட்க பிடிக்காதவர்கள்போல ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவர்களும் கலைந்து சென்றார்கள்.
இனியன் வீட்டிற்குச் செல்லும் சாலையில் அருள் திரும்புவதற்கும் இனியன் அங்கு வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. அருள் சிறிது சலிப்புடன் பேசினான்:
“என்னடா, உனக்காக எவ்வளவு நேரம் காத்துக் கிடக்கிறது. நீ பாட்டுக்கு மாணிக்கத்தைக் கூட்டிக்கிட்டு அவன் வீட்டுக்குப் போயிட்டே. உன் புத்தகப் பையை நான் தூக்கிக்கிட்டு அலையறேன். நல்ல சுமைடா.”
“அருள்! முடிஞ்ச மட்டும் அறிவை நெறையச் சுமக்கனும்’டா.” தன் புத்தகப் பையை வாங்கிக் கொண்டே இனியன் பேசினான்.
“அது சரி! அதுக்காக உனக்கு நான் ஏடு தூக்கியாக இருக்க முடியாதப்பா ! இந்தக் கிழிஞ்ச பையிலே நீ திணிச்சு வச்சிருக்கிற உன் அறிவுச்