இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19
எல்லா விஷயங்களைப் பற்றியும் இங்கே விரிவான விவாதம் நடைபெறும்.
வழக்கப்படி வம்பளப்பைத் தொடங்கி வைத்தான் கண்ணாயிரம்.
“எங்கடா நம்ம கண்ணனை ரெண்டுமூணு நாளா காணோம். லீவு லெட்டர்கூடவரலை’ன்னு வாத்தியார் சொன்னார்.” கண்ணன் வகுப்புக்கு வராத கரிசனத்தை வெளிப்படுத்தினான் கண்ணாயிரம.
கண்ணனின் இயல்பை நன்றாகவே புரிந்து வைத்திருந்த தங்கதுரை தன் கருத்தை வெளிப் படுத்தினான்:
“அவன் காடாறு மாசம் வீடாறு மாசம்’கிற கொள்கையைக் கண்டிப்பா கடைப்பிடிக்கிற வன்’டா. அவனுக்கு வெளியிலே பொழுது போக வழி இல்லை’ன்னாதான் பள்ளிக்கூடத்துக்கு வருவான்.”
பள்ளிக்கூடம் வருவதில் கண்ணனுக்கு நாட்டமில்லை என்பதைக் குறிப்பாக வெளிப் படுத்தினான் தங்கதுரை.
அதற்கு மேலும் விளக்கம்தர முன்வந்தான் மணி.
“அவன் என்ன'டா பண்ணுவான். தப்பித் தவறிப் பள்ளிக்கு வந்தாலும் இருக்கிற நேர