பக்கம்:திருப்புமுனை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


மெல்லாம் பெஞ்சு மேலேயே நிற்கும்படியாயிடுது.”

நேரத்திற்கு வராததையும் படிப்பில் மோசமாக இருப்பதையும் நாசூக்காகச் சொன்னான் மணி. இதனை வலுப்படுத்தும் வகையில் மேலும் அடுக்கினான் கண்ணாயிரம்:

“படிக்கிறதுதான் பழக்கமில்லே. பள்ளிக்குப் புத்தகமோ நோட்டோ எடுத்து வர்றதுகூட அவனுக்குப் பழக்கமில்லாப் போயிடிச்சேடா!”

கண்ணாயிரம் கூறியதைக் கேட்ட மூவரும் சிரித்துக் கொண்டார்கள்.

“அவன் அப்பா வாங்கிக் கொடுக்கறதில்லையோ என்னவோ?”

தன் ஐயப்பாட்டை வெளிப்படுத்தினான் தங்கதுரை. அதை அடியோடு மறுக்க முனைந்தான் மணி.

“நல்லா இருக்குடா கதை? அவன் ரொம்ப நல்லா படிக்கனும்’னு அவன் அப்பா எவ்வளவு ஆசைப்படறார் தெரியுமா? பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், தின்பண்டம் அது இது’ன்னு அவன் எதைக் கேட்டாலும் மறக்காம வாங்கித் தர்றார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/22&oldid=489771" இலிருந்து மீள்விக்கப்பட்டது