பக்கம்:திருப்புமுனை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

திரத்தை மேலும் அதிகப்படுத்தியது அவன் ஒருவித வன்ம உணர்வுடன் பேசினான்.

“எல்லாம் அந்த இனியனாலேதான் எனக்கு இந்த நிலை.”

கண்ணன் அப்பாவிடம் அடிபட்டதற்கும் இனியனுக்கும் என்ன சம்பந்தம். நண்பர்கள் அவரவர்கள் போக்கில் அனுமானிக்கத் தொடங்கினார்கள்.

“உன்னைப் பற்றிய உண்மைகளையெல்லாம் உங்கப்பாகிட்டே சொல்லிட்டானா?” மணி தன் யூகத்தை வெளிப்படுத்தினான்.

“அவனுக்கு ஏதுடா அவ்வளவு தைரியம்? இனியன் ஏழைப் பையனாக இருந்தாலும் எவ்வளவு நல்லாப் படிக்கிறான். எல்லாருகிட்டேயும் நல்ல பையன்’னு பேரு வாங்குறான். போட்டி, பரிசு அது இது'ன்னு எவ்வளவு பெருமை'ன்னு அவனோடு ஒப்புக் காட்டியே என்னை அடிச்சு நொருக்கிட்டார்'டா.”

கண்ணனுக்கு ஆறுதலும் தேறுதலும் தரும் வகையில் அவனுக்கு உற்சாக வார்த்தைகள் கூற முனைந்தான் கண்ணாயிரம்.

“எல்லாத்துக்குமே அந்த இனியன் போக்குத் தான்’டா காரணம். அவன் கொட்டத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/25&oldid=489774" இலிருந்து மீள்விக்கப்பட்டது