பக்கம்:திருப்புமுனை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


எப்படியும் அடக்கணும், அவன் பெருமையைத் தரை மட்டமாக்கனும். ஊரெல்லாம் அவனைப் பழிக்கும்படியாச் செய்யனும். இதுதான்’டா இனி நம்ம லட்சியம்”

கண்ணாயிரத்தின் பேச்சில் வன்ம உணர்ச்சி வலுவாக வெளிப்பட்டது. அவன் கூறிய பழிவாங்கும் போக்கை அவன் நண்பர்கள் மணியும் தங்கதுரையும் முழு மனதோடு ஏறகவில்லை என்றாலும் மறுப்பேதும் கூற முனையவில்லை. ஆனாலும் அவன் கருத்தை முழுமையாக ஏற்கும் பாவனையில், “உன் லட்சியம் தான் என் லட்சியம். இதுக்காக நான் எதையும் செய்யத் தயார்!’ எனத் தன் முழுமனதான ஆதரிப்பை உறுதியாக வெளிப்படுத்தினான் கண்ணன்.


4

வகுப்புகள் தொடங்க இன்னும் சிறிது நேரம் இருந்தது. வகுப்புக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக தங்கதுரை இருந்த பெஞ்சியை நோக்கி விரைந்து சென்றான் கண்ணன். அவன் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

“தங்கதுரை நம்ம மணி பிறந்த நாள் விருந்து ரொம்ப ஜோர்டா! எத்தனை வகை யான ஸ்வீட், சாப்பாடு!!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/26&oldid=489775" இலிருந்து மீள்விக்கப்பட்டது