பக்கம்:திருப்புமுனை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


“விருந்து மட்டுமா? விதவிதமான அலங்காரம். பாட்டுக் கச்சேரி, எல்லாம் ஒரே அமர்க்களம்'டா”

தன் மகிழ்ச்சியைத் தங்கதுரையோடு பகிர்ந்து கொண்டான் கண்ணன்.

எதையோ நினைவுபடுத்தும் பாவனையில் ஆர்வத்தோடு கையை உயர்த்தியபடி பேசினான் கண்ணாயிரம்.

“கண்ணன் ஒன்றைக் கவனிச்சியா?” கேள்விக்குறி வடிவில் நெற்றியைச் சுழித்தபடி வினா எழுப்பினான் கண்ணாயிரம்.

“முந்திரிப் பருப்பும் திராட்சைப் பழமுமாக இருந்த பாயாசத்தைத்தானே சொல்றே.” அலட்சியமாக கண்ணாயிரத்தைப் பார்த்துக் கூறினான் கண்ணன்.

“நீ சாப்பாட்டு இலையோடவே இரு. சுத்த சமையல்கட்டுடா நீ.” நளினமாகக் கிண்டலடித் தான் கண்ணாயிரம்.

“நம்ம ஆசிரியர் புத்தகப் பாக்கெட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்ததை மணியோட அப்பா ரொம்பவும் அலட்சியமா வாங்கி அப்பாலே போட்டதையும், அதுக்காக நம்ம ஆசிரியர் வருத்தப்பட்டதையும் தானே சொல்றே?” தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/27&oldid=489776" இலிருந்து மீள்விக்கப்பட்டது