பக்கம்:திருப்புமுனை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


நினைத்ததை சரிபார்த்துக் கொள்ள முயன்றான் தங்க துரை.

“ஆமாடா, பிறந்த நாள் பரிசா பெரிய புத்தகப் பாக்கெட்டை, மணி கையிலே கொடுத்து. ‘நல்லா கஷ்டப்பட்டுப் படிச்சு வாழ்க்கையிலே முன்னேறனும்’னு வாழ்த்தினப்போ மணியோட அப்பா வழிமறிச்சு......” கண்ணாயிரம் முடிக்கவில்லை. அதற்குள் கண்ணன்,

“இடைமறிச்சு என்ன சொன்னார்?” என ஆர்வத் துடிப்புடன் கேட்டான்.

கண்ணாயிரம் தொடர்ந்தான்:

“என் மகன் அதிகமாப் படிக்கக் கூடாதுங்கறது என் கொள்கை. அவனுக்கு வேண்டிய அளவு சொத்து இருக்கு. அவன் வாழ்நாள் முழுக்க சுகமாகவே வாழ முடியும். அவன் ஒண்ணும் அதிகம் படிச்சு உத்தியோகம் அது இதுன்னு அலைய வேண்டிய அவசியம் இல்லே, ஏதோ பாஸ் பண்ற அளவுக்கு படிச்சு முடிச்சா போதும்’னு சொல்லி அலட்சியமாக நம் ஆசிரியர் தந்த புத்தகப் பாக்கெட்டை வாங்கி அப்பாலே போட்டார்.”

“கண்ணாயிரம் கூறிய செய்தியைக் கேட்ட அவன் நண்பர்களுக்கு மணியின் அப்பா போக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/28&oldid=489777" இலிருந்து மீள்விக்கப்பட்டது