இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27
பிடித்தமாக இல்லை என்பது அவர்களின் அமைதியே புலப்படுத்தியது. எனினும், அடுத்து என்ன நடந்தது என்பதை அறிய தங்கதுரை ஆர்வப்பட்டான்.
“அப்புறம்?' வினா தொடுத்தான் தங்கதுரை
“அப்புறம் என்ன? ஆசிரியர் கோபமா வெளியேறத் தொடங்கினார் உடனே மணி ஓடிவந்து, சமாதானம் சொல்லத் தொடங்கினான். அப்போது அவனுடைய அப்பா வந்து...”
“அப்பா வந்து என்ன சொன்னார்?” ஆர்வ மிகுதியால் கண்ணாயிரத்தை இடைமறித்துக் கேட்டான் கண்ணன்.
“சமாதானம் சொன்னார்.” கண்ணாயிரம் கூறினான்.
“என்ன சமாதானம் சொன்னார்?” ஆர்வப் பெருக்குடன் வினா எழுப்பி கண்ணாயிரத்தின் முகத்தை உற்று நோக்கினான் கண்ணன்.
கண்ணாயிரம் மணியின் அப்பா கூறியதை அப்படியே கூறத் தொடங்கினான்.
“மணியின் அண்ணன் செந்தில் படிப்பில் ரொம்பக் கவனம் செலுத்தி வந்தான். வகுப்பிலே