பக்கம்:திருப்புமுனை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


எப்போதும் முதலாவதாக வருவான். எப்பவும் புத்தகமும் கையுமாகவே இருப்பான். இரவு பகலாகப் படிப்பான். அவன் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்னதாக மூளையில் கட்டி வந்து இறந்துவிட்டான். இடைவிடாத படிப்பினால் தான் இந்த இறப்பு ஏற்பட்டதாக இன்னும் நம்பிக் கொண்டிருப்பதாகவும் மணிக்குப் படிப்பில் ஆர்வம் இருந்தாலும் அவனை அதிகமாகப் படிக்கவிடாமல் தான் தடுத்து வருவதாகவும் சொன்னார்.”

“இதுக்கு நம்ம ஆசிரியர் எதுவுமே சொல்லலையா? கண்ணாயிரத்தின் பதிலைத் தொடர்ந்து கேள்வி கேட்டான் தங்கதுரை.

“மணியோட அப்பாவின் முடிவு ஒருவித மூடநம்பிக்கை'ன்னும், மூளையிலே ஏற்பட்ட கட்டிக்கும் படிப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை’ன்னும் எடுத்துச் சொல்லி விளக்கினார். அதோட, பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாததாலேயும் வீட்டில் நல்ல சூழ்நிலை இல்லாததுனாலேயும் மணி திறமைசாலியா வர முடியா மல் போச்சு’ன்னும் ஒரு குட்டி வகுப்பே நடத்தி முடிச்சிட்டார்.”

எதையோ நினைவுபடுத்திக் கொண்டவனாக கண்ணன் வேறொரு விஷயத்தைச் சொல்ல முனைந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/30&oldid=489779" இலிருந்து மீள்விக்கப்பட்டது