இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31
கிடக்கிற மாணிக்கம் தாயாரிடம் கொண்டு போய்க் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினான். நான் அதைக் கேட்டு நெஞ்சு நெகிழ்ந்திட்டேன். எனக்குக் கண்ணீரே வந்திருச்சு. இனியனின் அன்பையும் மனிதாபிமான உணர்ச்சியையும் இரக்க சிந்தையையும் கண்டு அந்த அம்மா கண்ணிர்விட்டு அழுதுட்டாங்க.”
அருள் தன் நண்பன் இனியனின் இனிய செயலை விளக்கும்போது அவன் கண்களில் உணர்ச்சி மேலீட்டால் நீர் சுரந்து நின்றது. இதைக் கண்ட தங்கதுரையும் கண் கலங்கினான். அவன் தன் உணர்ச்சியை அடக்க முடியாதவனாக வெளிப்படுத்தினான்.
“என்னடா, கண்ணாயிரம் நம்ம அருள் சொல்றது நெஞ்சை உருக்குற கதையாயிருக்கே?”
“அதான் நீயே சொல்லிட்டியே.”
“என்ன?ன்னு?”
“கதை’ன்னு!”
கண்ணாயிரத்தின் பேச்சு அருளுக்குப் பிடிக்காததால் அவன் சட்டென்று அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினான். அடுத்து அவர் களும் புறப்பட்டார்கள்.