பக்கம்:திருப்புமுனை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


6

பள்ளிக்கூட விளையாட்டுத் திடலின் ஒரமாக உள்ள மரத்தடிதான் அவர்களின் அரட்டை மாநாடு நடைபெறும் வழக்கமான இடம். அன்றைக்கும் அவர்கள் அங்கே குழுமத் தவறவில்லை.

கண்ணாயிரமும் தங்கதுரையும் மணியும் முன்பே அங்கே வந்து சேர்ந்துவிட்டார்கள். கண்ணனை இன்னும் காணோம். அவன் வருகையை எதிர்நோக்கியபடி காத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கண்ணனும் வந்து சேர்ந்தான். அவன் கையில் ஒரு ‘ஸ்வீட் பாக்கெட்’ இருந்தது. இதை முதலில் கண்ட கண்ணாயிரம் ஆவலோடு அதைப்பற்றி வினவினான்.

“என்னடா, கண்ணா கைநிறைய ஸ்வீட் பாக்கெட். இன்னிக்கு என்ன உனக்குப் பிறந்த நாளா? நீ எங்களுக்குச் சொல்லவே இல் லையே?” வியப்போடு வினவினான்.

“எனக்குப் பிறந்த நாளெல்லாம் ஒண்னு மில்லேடா. ஆனால், ‘இது கண்ணனின் வாழ்விலே ஒர் புதுமை நாள்’னு சொல்லி எங்கப்பா இன்னிக்கு எனக்கு 5 ரூபா கொடுத்தார்’டா. அப்படியே அதுக்கு ஸ்வீட் வாங்கிட்டு உங்களைப் பார்க்க வந்துட்டேன்.” மூச்சு விடாமல் கூறி முடித்தான் கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/36&oldid=489786" இலிருந்து மீள்விக்கப்பட்டது