பக்கம்:திருப்புமுனை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


“புதுமை நாளா! ஒண்ணும் புரியலையே?” வியப்புடன் கேட்டான் தங்கதுரை.

“ஒரு வேளை கண்ணன் பள்ளிக்கூடம் போகலே, படிக்கலே, நல்ல மார்க் எடுக்கலை’ன்னு எப்பவும் அடிக்கிற அவன் அப்பா, இன்னிக்கு அப்படி அடிக்காததை புதுமையா நெனச்சு புதுமை நாளா கொண்டாடறாரோ என்னவோ?” கிண்டலாகக் கேட்டான் மணி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லேடா. நீங்கள் "லாம் கட்டாயப்படுத்தினதாலே கட்டுரைப் பேட்டிக்குப் பெயர் கொடுத்தேனா, அதை நம்ம ஆசிரியர் எங்கப்பாகிட்டே நேற்று சொல்லியிருக்கிறார். எங்கப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம் ஏற்பட்டிருச்சு. கண்ணா! நீ இப்படியெல்லாம் திறமையாளனா இருக்கனும்’னு தான் நான் கனவு காண்கிறேன்’னு சொல்லி தின்பண்டம் வாங்கிக்க 5 ரூபா கொடுத்தார்டா.”

‘ஸ்வீட் பாக்கெட்’ வந்த வரலாறைச் சொல்லி முடித்தான் கண்ணன்.

“ஐயோ பாவம்'டா உங்கப்பா!” இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினான் மணி.

“தின்பண்டம் வாங்கித் தின்ன சதா காசு கொடுத்து, கண்ணன் தன் கவனத்தைப் படிப்புப் பக்கமே திரும்பவிடாம, தீனி மேலேயே இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/37&oldid=489787" இலிருந்து மீள்விக்கப்பட்டது