பக்கம்:திருப்புமுனை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36


கும்படியா வச்சிருக்காரே அதுக்காக அனுதாபப் படறியா? இல்லே...” மணியின் அனுதாப வார்த்தைக்கு காரணம் கற்பிக்க முற்பட்டான் தங்கதுரை.

“இல்லைடா, கண்ணனைப்பற்றி அவன் அப்பா ரொம்ப நல்லா தப்புக்கணக்குப் போட்டதை நெனச்சுத்தான் அனுதாபப்படறேன்.” மணியின் பேச்சு கண்ணனுக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.

'காப்பியடிச்சாக்கூட கணக்கிலே பத்து மார்க்குக்கு மேலே வாங்காத நீ எங்கப்பா கணக்கைப்பத்திப் பேசறையா?” சுடச்சுடப் பதில் தந்தான் கண்ணன்.

இவர்களின் வாய்ச்சண்டை கண்ணாயிரத் துக்கு என்னவோ போலிருந்தது. அவன் இடை மறித்துப் பேசலானான்.

“போதும்'டா. உங்களுக்குள்ளே சண்டை வேணாம். நம்ம காரியம் கெட்டுடும். போட்டியிலே எப்படியும் இனியன் தோல்வியடையணும்.” தங்களின் குறிக்கோளை நினைவுப்படுத்தி வாய்ச்சண்டை வளராமல் தடுத்தான் கண்ணாயிரம்.

“நாம வெற்றி பெறணும்னா அவன் மாதிரி எப்படி’டா கட்டுரை எழுதறது? எனக்கு நல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/38&oldid=489788" இலிருந்து மீள்விக்கப்பட்டது