பக்கம்:திருப்புமுனை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41


அனுபவப்பூர்வமாகப் பேசினான் மணி.

ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல பரப்பரப்புடன் பேசினான் கண்ணாயிரம்.

“எனக்கு சுருக்கான ஒரு குறுக்கு வழி தோணுதுடா. கண்ணாயிரம் பீடிகைபோட்டுப் பேசினான்.

“உனக்கு எப்பவுமே அந்த வழிதாண்டா தோணும்:” மணி கேலி செய்யத் தவறவில்லை.

“அது என்ன சுருக்கான குறுக்கு வழி?” கண்ணாயிரம் சொல்லப் போகும் வழியை அறிய அவசரப்பட்டான் தங்கதுரை.

“இனியன் இந்தக் கட்டுரையை எழுத என்னென்ன செய்யறான்? எதை எதைப் படிக்கிறா'ன்னு துப்பறியனும். நாமும் அதே மாதிரி செஞ்சுட்டா போட்டியிலே சுலபமா வெற்றி யடையலாம்.”

ஏதோ ஒரு நல்ல யோசனையைச் சொல்லிவிட்ட பெருமிதம் கண்ணாயிரம் முகத்தில் களை கட்டி நின்றது. வெற்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை மாறி மாறிப் பார்த்தான்.

“எப்படியோ, கடைசியிலே இனியன் வழிக்கே எல்லோரும் போய்க்கிட்டிருக்கோம், இல்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/43&oldid=489793" இலிருந்து மீள்விக்கப்பட்டது