இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42
மணி கூறுவது ஒரு வகையில் உண்மை யாயிருந்தாலும் காரியம் சாதிப்பதிலேயே கருத் தாக இருந்தான் தங்கதுரை.
“இனியனிடம் போய் அதை எப்படி’டா கண்டுபிடிக்கிறது?”
தங்கதுரையின் கேள்விக்கு மணி பதில் கூற முற்பட்டான்.
“இதுக்கு ஏன்டா மண்டையைப் போட்டு உடைச்சுக்கிறீங்க நீ என்ன புஸ்தகம் படிச்சு கட்டுரை தயாரிக்கப் போறே'ன்னு இனிய னையே கேட்டுட்டாப் போச்சு. சுருக்கமான குறுக்கு வழியிலே நம்ம காரியம் சுலபமா முடிஞ்சிடும்.”
மணி கூறியது கண்ணாயிரத்துக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
“நம்ம எதிராளிக்கிட்டேயே நம்மை சரணடையச் சொல்றான்'டா.”
தன் அச்ச உணர்வை வெளிப்படுத்தினான் கண்ணாயிரம்.
“தகறாரை விடுங்கடா. இப்ப இனியன் எங்கே இருக்கிறான்? என்ன படிக்கிறான்? எப்படி கட்டுரை தயாரிக்கிறான்’ங்கிறதை எப்