51
நூலை மணியின் கையில் கொடுத்தான். மணி தன் கையிலிருந்த நூலை புரட்டிக் கொண்டே இனியனை நோக்கி வியப்போடு கேட்டான்:
“இதை என்கிட்டே கொடுத்திட்டா நீ எப்படிடா போட்டிக் கட்டுரை எழுதுவே?”
“நான் இதையெல்லாம் முன்பே படிச்சிட்டேன். எழுதறபோது மனசிலே என்ன வருதோ அதை எழுதுவேன். இன்று இரவு போட்டிக் கட்டுரை எழுதலாம்’னு இருக்கேன். நீ இந்தப் புத்தகத்தை எடுத்துக்கிட்டுப் போ.”
இனியன் தன் திறமை மீது கொண்டுள்ள நம்பிக்கையும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் மணியைச் சிறிது நேரம் திக்குமுக்காட வைத்தது. இனியனின் இனிய பண்பை நினைந்து நெகிழ்ந்தான்.
“ரொம்ப நன்றி இனியன். நான் வர்றேன்” என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.
வழக்கமாகக் கூடும் மரத்தடியில் தங்கதுரையும் கண்ணாயிரமும் கூடினர். மணியின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தான். சிறிது நேரத்தில் மணியும் அங்கு வந்து சேர்ந்தான்.