பக்கம்:திருப்புமுனை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


அவனைக் கண்ட நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சி யோடு அவனை வரைவேற்கத் தயாராயினர். வெற்றிப் புன்னகையோடு வந்து சேர்ந்தான்.

“என்னடா மணி போன காரியம் என்னாச்சு?”

கண்ணாயிரம் பரபரப்புடன் கேட்டான்.

“அவன் சிரிச்சுக்கிட்டு வர்றதிலே இருந்து தெரியலே, நூத்துக்கு நூறு வெற்றி"ன்னு.” தன் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினான் தங்கதுரை.

“இனியன் ரொம்ப நல்லவன்’டா. அவன் படிக்கிற அறையையே அறிவாலயமா வச்சிருக்கான்'டா. அவன்கூட கொஞ்ச நேரம் பேசினா நாமும் அவனைப் போல திறமையான மாணவனா மாறிடலாம்'டா.”

மணி இனியனைப் பற்றிப் புகழ்ந்து கூரிய வார்த்தைகள் கண்ணாயிரத்துக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் அதை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாமல் சற்றே வெறுப்புடன்,

“போதும்'டா இனியன் துதி புராணம். புத்தகம் கிடைத்ததா? அவன் கட்டுரை எழுதிட்டானா? அதைச் சொல்லுடா முதல்லே.” துரிதப் படுத்தினான் கண்ணாயிரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/54&oldid=489804" இலிருந்து மீள்விக்கப்பட்டது