பக்கம்:திருப்புமுனை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


“இதோ பார்’டா, 'அறிவுச் சுடர்’ங்கிற புத்தகம். நம்ம ஆசிரியர் எழுதின இந்தப் புத்தகத்திலே ‘உழைப்பே செல்வம்’னு ஒரு கட்டுரை இருக்கு. அதைப் படிச்சிட்டு உழைப்பும் உயர்வும்'ங்கிற தலைப்பிலே போட்டிக் கட்டுரை எழுது'ன்னு அவனே கொடுத்தான் ”டா.” எனக் கூறி மணி புத்தகத்தைத் தன் நண்பர்களை நோக்கி நீட்டினான்.

“உண்மையிலேயே இனியனுக்கு ரொம்ப நல்ல மனசுடா!” புத்தகத்தை வாங்கிக் கொண்டே பாராட்டினான் தங்கதுரை.

“ஏன்'டா, இனியன் கட்டுரை எழுதலையா?” அவசரப்பட்டான் கண்ணாயிரம்.

“அவன் இதையெல்லாம் முன்பே படிச்சிட்டானாம். இன்னிக்கு இரவு எழுதி நாளைக்குக் கொடுக்கப் போறதாச் சொன்னான்.” என்று மணி கூறி முடித்ததும் கண்ணாயிரம் மெல்லிய குரலில் தனக்குத் தானே “நீ எழுது, நான் கொடுக்கிறேன்னு முனுமுணுத்தான். இவன் முணுமுணுத்தது மற்றவர்கட்குச் சரிவர கேட்க வில்லை. என்ன முணுமுணுக்கிறான் என்பதை அறிந்து கொள்ள ஆவல் கொண்டான் தங்கதுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/55&oldid=489805" இலிருந்து மீள்விக்கப்பட்டது