பக்கம்:திருப்புமுனை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


அவன் தனக்குள் ஏதோ ஒரு முடிவை எடுத்து விட்டவனாக நம்பிக்கையோடு பேசினான்:

“நீங்க எதைப் பார்த்தாவது எழுதுங்க. நான் புதுக் கட்டுரையே எழுதிப் போட்டிக்குக் கொடுத்துப் பரிசு வாங்கறேன்.”

கண்ணாயிரம் இவ்வாறு கூறியதை அவன் நண்பர்களால் நம்பவே முடியவில்லை. மணி கேட்டே விட்டான்.

“அதெப்படி'டா முடியும்? வகுப்பில் பயிற்சிக் கட்டுரை எழுதுறதே உனக்குத் தகராறு. நீயாவது போட்டிக் கட்டுரை எழுதி பரிசு வாங்குற தாவது?”

பொறுத்திருந்து பாருடா. கண்ணாயிரம் திறமையை...” நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு நடக்கலானான்.

“என்னமோ விபரீதம் நடக்கப் போவுதுடா. நமக்கேன்’டா வம்பு. வாங்கடா நாம போவோம். மணி அபாயச் சங்கு ஊதிக்கொண்டே நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/57&oldid=489807" இலிருந்து மீள்விக்கப்பட்டது