59
பரிசு வாங்கி வந்த இனியனின் பரிசு ஆதிக்கம் இந்த வருஷத்தோடு அம்பேல்’டா. போட்டி முடிவு தெரிஞ்சப்புறம் உனக்கே அது புரியும். முடிவுதான் எப்ப அறிவிப்பாங்களோ தெரி யலே.”
“நாளைக்கு நடக்கப் போற பள்ளி ஆண்டு விழாவிலே போட்டி முடிவை அறிவிச்சுப் பரிசும் கொடுக்கப் போறதா இப்பதான்'டா நம்ம ஆசிரி யர் சொன்னார்.” வந்து கொண்டிருந்த தங்கதுரை ஆசிரியரின் அறிவிப்பை ஒப்புவித்தான்.
பள்ளி ஆண்டு விழா கோலாகலமாகத் தொடங்கியது. மேடை வண்ண வண்ணத் தோரணங்களால் அழகு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சி ஆராவாரத்துடன் அமர்ந்திருந்தனர். மேடையில் விழாத் தலைவரும் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் அமர்ந்திருந்தனர். கடவுள் வாழ்த்துப் பாடி முடிந்தவுடன் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. கட்டுரைப் போட்டிப் பொறுப்பாளராக இருந்த ஆசிரியர் ஒலிபெருக்கி முன் வந்து நின்றார். ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்:
“தலைவர் அவர்களே! மாணவச் செல்வங்களே! நமது பள்ளி ஆண்டு விழாவிலே குழுமி